/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருத்தி விளைச்சல் அதிகரிக்க அதிதீவிர முயற்சி; தொழில்துறையினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
/
பருத்தி விளைச்சல் அதிகரிக்க அதிதீவிர முயற்சி; தொழில்துறையினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
பருத்தி விளைச்சல் அதிகரிக்க அதிதீவிர முயற்சி; தொழில்துறையினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
பருத்தி விளைச்சல் அதிகரிக்க அதிதீவிர முயற்சி; தொழில்துறையினரிடம் மத்திய அமைச்சர் உறுதி
ADDED : ஜூலை 11, 2024 06:22 AM

கோவை : 'நமது நாட்டில் பருத்தி விளைச்சல் அதிகரிக்க, அதிதீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஜவுளி உற்பத்தி துறைக்கு சாதகமான கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்' என, கோவையில் இருந்து சென்ற தொழில்துறையினரிடம், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன், செயற்குழு உறுப்பினர் சபரீஷ் பழனி ஆகியோர், புதுடில்லி சென்று, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, நேற்று சந்தித்தனர்.
அப்போது, ஜவுளித்துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும். இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைகளுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து, அமைச்சரிடம் விளக்கினர்.
ஐ.டி.எப்., குழு சார்பில் கொடுத்த மனுவில், 'நமது நாட்டின் மாதாந்திர ஆயத்த ஆடை ஏற்றுமதி, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு இருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு உள்ளது.
'சீனா பிளஸ் ஒன்' என்ற சாதகமான சூழலை பயன்படுத்தி, ஏற்றுமதியை படிப்படியாக உயர்த்த வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த உற்பத்திக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். 'ரெடி டூ கட்' துணிகள் தயாரிக்க வேண்டும்.
ஒரு ஹெக்டரில் ஆயிரம் கிலோ பருத்தி விளைவிக்க வேண்டும். ஜப்பான் போன்ற புது சந்தைக்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். பருத்தி விளைச்சலை துல்லியமாக அறிய, 'சாட்டிலைட்' தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு குறித்து, ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், ''பருத்தி விளைச்சலை அதிகரிக்கும் முயற்சியில் அதிதீவிரம் காட்டப்படும்; அதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்,'' என்றார்.

