/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகளுக்கு இடையேயான மேலாண்மை விழா
/
கல்லுாரிகளுக்கு இடையேயான மேலாண்மை விழா
ADDED : மார் 15, 2025 12:10 AM

கோவை; எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில், பிரமாண்டமான கல்லுாரிகளுக்கு இடையேயான மேலாண்மை விழா நடந்தது. ஏ.ஐ., அடிப்படையிலான செமி கண்டக்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுரேஷ் குப்புசாமி விழாவைத் துவக்கி வைத்தார்.
இதில், வணிக வினாடி - வினா, வணிகத் திட்ட போட்டி, தயாரிப்பு வடிவமைப்பு சவால், வழக்கு சவால், பங்கு போர், கார்ப்பரேட் நடைபயணம் மற்றும் சிறந்த மேலாளர் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டனர். ஆன்லைன் போட்டிகளில் இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் தங்கள் நிர்வாக நுண்ணறிவுகளை வெளிப்படுத்துவதற்கான போட்டித் தளமாக விழா இருந்ததுடன், புதுமை மற்றும் மூலோபாய சிந்தனையையும் வளர்க்கும் வகையில் அமைந்தது.
கோவை டி.சி.எஸ்., திட்ட மேலாளர் தரணி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் செந்துார் பாண்டியன், எஸ்.என்.எஸ்., பொறியியல்கல்லுாரி முதல்வர் சார்லஸ், எஸ்.என்.எஸ்., பி - ஸ்பைன் இயக்குனர் பாமினி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.