/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டங்களுக்கு இடையே கால்பந்து போட்டி
/
மாவட்டங்களுக்கு இடையே கால்பந்து போட்டி
ADDED : ஜூலை 03, 2024 09:53 PM

பெ.நா.பாளையம் : இடிகரையில் உள்ள கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளியில், மாவட்டங்களுக்கு இடையேயான டியூரா நினைவு கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்தன.
இதில், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 28 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் கால்பந்து சங்கங்களை சேர்ந்த, 220க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
12 வயது மற்றும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையுடன் ரொக்கம், விருதுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
12 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில், திருப்பூர் எஸ்.சி.வி., கிங்ஸ் அகாடமி முதல் பரிசையும், கோயம்புத்தூர் சிட்டி கால்பந்து சங்கம் இரண்டாவது பரிசையும், கோவை கிக்கானி வித்யா மந்திர் பள்ளி மூன்றாவது பரிசையும் வென்றன.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகளில், முதல் பரிசை ஈரோடு டி.பி.எஸ்.எஸ்., ராஜேந்திரா பள்ளியின் 'பி' அணி வென்றது.
இரண்டாவது, மூன்றாவது பரிசுகளை, முறையே திருப்பூர் எஸ்.சி.வி., கிங்ஸ் அகாடமியும், ஈரோடு டி.பி.எஸ்.எஸ்., ராஜேந்திரா பள்ளியின் 'ஏ' அணியும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, இடிகரை கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி யின் தலைவர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.