/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்
/
பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்
ADDED : ஆக 06, 2024 11:16 PM

கோவை : கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாணவ - மாணவியருக்கு வாலிபால், கூடைப்பந்து, த்ரோபால், கோ கோ, பூப்பந்து, ஹேண்ட்பால், கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 80 பள்ளிகளை சேர்ந்த 1700 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்கள்
மாணவர் பிரிவு வாலிபால் போட்டியில் சபர்பன் பள்ளி முதலிடம், ஏ.பி.சி., பள்ளி இரண்டாமிடம்; த்ரோபால் போட்டியில் டி.என்.ஜி.ஆர்., முதலிடம், ஸ்ரீமதி பத்மாவதி பள்ளி இரண்டாமிடம்; கோ கோ போட்டியில் எம்.டி.என்., முதலிடம், சி.ஆர்.ஆர்., பள்ளி இரண்டாமிடம்; கபடியில் எவான்ஸ் பள்ளி முதலிடம், எஸ்.எம்., திருச்சி பள்ளி இரண்டாமிடம்; ஹேண்ட்பால் போட்டியில் ஜி.கே.டி., முதலிடம், நிர்மலா மாதா பள்ளி இரண்டாமிடம்; கால்பந்தில் ஸ்டேன்ஸ் பள்ளி முதலிடம், மணி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.
மாணவியர் பிரிவு வாலிபால் போட்டியில் இருகூர் அரசு பள்ளி முதலிடம், குமுதா மெட்ரிக்., இரண்டாமிடம்; த்ரோபால் போட்டியில் பிரசன்டேஷன் பள்ளி முதலிடம், கிருஷ்ணம்மாள் பெண்கள் பள்ளி இரண்டாமிடம்; கோ கோ போட்டியில் டி.என்.ஜி.ஆர்., முதலிடம், எம்.டி.என்., இரண்டாமிடம்; பூப்பந்தில் காருண்யா வித்யா பவன் முதலிடம், வித்யா விகாசினி இரண்டாமிடம்; கூடைப்பந்து போட்டியில் கிருஷ்ணம்மாள் பள்ளி முதலிடம், சுகுணா பள்ளி இரண்டாமிடம் பிடித்தன.