/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்முனைவோராக விருப்பமா? கோவை கலெக்டர் சொல்கிறார் வழி
/
தொழில்முனைவோராக விருப்பமா? கோவை கலெக்டர் சொல்கிறார் வழி
தொழில்முனைவோராக விருப்பமா? கோவை கலெக்டர் சொல்கிறார் வழி
தொழில்முனைவோராக விருப்பமா? கோவை கலெக்டர் சொல்கிறார் வழி
ADDED : செப் 01, 2024 01:26 AM
கோவை;தொழில்முனைவோராக விரும்புவோர் அல்லது தொழில் செய்வோர் அல்லது தொழில் செய்ய திட்டமிடுவோர், பல்வேறு சேவைகள் பெற மதி சிறகுகள் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 31 மாவட்டங்களில், 3,994 கிராமங்களில், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த, சுயசார்புள்ளவர்களாக உருவாக்க, தொழில் ஊக்குவிப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதற்காக, 'மதி சிறகுகள் தொழில் மையம்' செயல்படுத்தப்படுகிறது. மொத்தம், 42 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையமும் இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு சேவை அளிக்கின்றன.
தொழில் கருத்துருவாக்கம், அரசு துறை திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெறுவதற்கான வணிகத்திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள், பதிவு மற்றும் இணக்கம் பெறுதல், திட்ட மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் ஆதரவு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவைகளை இம்மையம் வழங்குகிறது.
தொழில்முனைவோராக விரும்புவோர் அல்லது தொழில் செய்பவர்கள் அல்லது தொழில் துவங்க திட்டமிடுவோர், மிகக்குறைந்த செலவில் மதி சிறகுகள் மையத்தில், அதற்கான சேவைகளை பெறலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.