ADDED : ஆக 21, 2026 08:52 PM
கண்ணம்பாளையம்: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் (கே.ஐ.டி.,), 10-வது சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை மாநாடு நடந்தது. 1,074 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இதில், 200 ஆய்வுக் கட்டுரைகள் ஐ.இ.இ.இ., வெளியீட்டிற்கு தேர்வானது.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் கூடுதல் இயக்குனர் ராம்பிரபு பேசுகையில், ‘‘தொழில்நுட்ப அறிவுடன் ஆராய்ச்சித் திறன், தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு, நேர மேலாண்மை மற்றும் சமூக நுண்ணறிவு ஆகிய திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.
மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழக (ஐ.இ.இ.இ.,)சென்னை பிரிவு தலைவர் டாக்டர் வெங்கடேஷ்குமார், கல்லுாரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமைச் செயல் அலுவலர் மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ராமசாமி, மின்னணுவியல் பொறியியல் துறைத் தலைவர் லால் ராஜா சிங் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
