தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆனைகட்டி ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்

ஆனைகட்டி ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்

ஆனைகட்டி ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்


ADDED : ஆக 21, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஆனைக்கட்டியில் உரிய துறை சார்ந்த அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்காத எட்டு தனியார் ரிசார்ட்டுகளுக்கு, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில் அனுமதியின்றி தனியார் ரிசார்ட்டுகள் செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கு, சென்னை ஐகோர்ட் விசாரணையில் உள்ளது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ரிசார்ட்டுகளில் கூட்டு கள ஆய்வு நடத்தினர்.

உணவு பாதுகாப்பு சான்று, வர்த்தக உரிமம், மதுபான விற்பனை உரிமம், தீயணைப்புத்துறை தடையில்லா சான்று, வனத்துறை அனுமதி, கட்டட உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இரண்டு ரிசார்ட்டுகள் தேவையான அனுமதிகள்  பெற்றன; மீதமுள்ள ரிசார்ட்டுகள், பிற அரசு துறைகளிடம் பெற்ற அனுமதி ஆவணங்களின் நகல்களை உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கை, சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us