/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச பாரா த்ரோபால் கோவை வீரர்கள் அமர்க்களம்
/
சர்வதேச பாரா த்ரோபால் கோவை வீரர்கள் அமர்க்களம்
ADDED : ஜூன் 29, 2024 01:27 AM

கோவை:தாய்லாந்தில் நடந்த சர்வதேச பாரா த்ரோபால் போட்டியில், கோவையை சேர்ந்த நான்கு பேர் பங்கேற்று அசத்தினர்.
இந்திய - தாய்லாந்து இடையே மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா த்ரோபால் போட்டி தாய்லாந்தில் ஜூன், 15, 16 ஆகிய தேதிகள் நடந்தது. இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பங்கேற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினர்.
இந்திய அணிக்கான தேர்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கோவையை சேர்ந்த மோகன் குமார், சதீஷ் குமார், நித்தியா, ஜெயபிரபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தாய்லாந்தில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இப்போட்டியில் கோவை வீரர் மற்றும் வீராங்கனையினர் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். கோவையை சேர்ந்த வீரர் - வீராங்கனையினர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.