ADDED : ஜூலை 30, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:டி.ஜே., நினைவு சர்வதேச புகைப்பட போட்டி பரிசளிப்பு விழா மற்றும் கண்காட்சி அவிநாசி ரோடு கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடந்தது.
சர்வதேச அளவில் இயற்கையின் புதுமை மற்றும் வனவிலங்குகளின் உருவப்படம் என்ற தலைப்பில் நடந்த டி.ஜே., நினைவு புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதை எல்.எம். டபிள்யூ., குழுமத்தின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழங்கினார். மேலும் சிறந்த பரிசுகள் பெற்ற புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் கண்காட்சி தொகுப்பாக அவிநாசி ரோடு கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் காட்சி அரங்கில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.