/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச மகளிர் தினம் இலவச மருத்துவ முகாம்
/
சர்வதேச மகளிர் தினம் இலவச மருத்துவ முகாம்
ADDED : மார் 06, 2025 10:19 PM
கோவை; சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பி.ஆர்.ஜெ., ஆர்த்தோசென்டர் மற்றும் மேக் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
இம்முகாமில், அடிப்படை சுகாதார பரிசோதனைகள், நிபுணர்கள் ஆலோசனைகள், எலும்பு அடர்த்தி பரிசோதனைகள், பல் பரிசோதனை, டிரினிட்டி கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை, நாள்பட்ட நோய் மேலாண்மை, தேர்வு செய்யப்பட்ட இலவச ரத்த சோதனைகள் மற்றும் எக்ஸ்ரே, ஊட்டச்சத்து உணவு முறை உள்ளிட்ட பல்வேறு சாராம்சங்களுடன் நடக்கிறது.
இலவசமாக நடைபெறும் மருத்துவ முகாமை பெண்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் காலை,9:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை, மேட்டுப்பாளை யம் ரோடு எருகம்பெனி பஸ் ஸ்டாப், பி.ஆர்.ஜெ., ஆர்த்தோசென்டர் மற்றும் மேக் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. மேலும், விபரங்கள் அறிய, 9842230865 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.