/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநிலங்களுக்கு இடையே 'செபக்தக்ரா': ஜூனியர், சீனியர் அணிகள் அசத்தல்
/
மாநிலங்களுக்கு இடையே 'செபக்தக்ரா': ஜூனியர், சீனியர் அணிகள் அசத்தல்
மாநிலங்களுக்கு இடையே 'செபக்தக்ரா': ஜூனியர், சீனியர் அணிகள் அசத்தல்
மாநிலங்களுக்கு இடையே 'செபக்தக்ரா': ஜூனியர், சீனியர் அணிகள் அசத்தல்
ADDED : மார் 05, 2025 10:53 PM

கோவை:
'செபக்தக்ரா' போட்டியில் ஜூனியர், சீனியர் அணி வீரர்களின் ஆட்டம், மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் இருந்தது.
மலேசியா, தாய்லாந்து நாடுகளில் பிரபலமான, செபக்தக்ரா' அல்லது 'கிக் வாலிபால்' என்று அழைக்கப்படும் விளையாட்டு போட்டிகளை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் ஆண்டுதோறும் நடத்திவருகின்றனர். 18வது மாநிலங்களுக்கு இடையேயான, 'செபக்தக்ரா' போட்டி மூன்று நாட்கள் நடந்தது.
ஜூனியர் மற்றும் சீனியார் பிரிவுகளில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
இரண்டாம் நாளில், ஜெயேந்திரா ஏ அணி, 15-6 புள்ளிகளில் சர்வஜன ஏ அணியையும், ஜெயேந்திரா பி அணி, 15-11 என்ற புள்ளிகளில், சர்வஜன ஏ அணியையும் வென்றன.
சர்வஜன ஏ அணி, 15-8 என்ற புள்ளிகளில், கே.எஸ்.ஐ. ஆர்.எஸ்., சி அணியையும், சர்வஜன ஏ அணி, 15-9 என்ற புள்ளிகளில் ஜெயேந்திரா சி அணியையும், ஜெயேந்திரா ஏ அணி, 15-6 என்ற புள்ளிகளில், ஜெயேந்திரா சி அணியையும் வென்றன.
'லீக்' சுற்றுகளை அடுத்து நடந்த, ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டியில், ஜெயேந்திரா பி அணி, 15-5 என்ற புள்ளிகளில் ஜெயேந்திரா ஏ அணியை வீழ்த்தி, முதல் பரிசை தட்டியது.
சீனியர் பிரிவில் கிராவிட்டி பைட்டர்ஸ் அணி, 15-5 என்ற புள்ளிகளில் பிரதர்ஸ் இன் ஆர்ம்ஸ் அணியை வென்றது.
இறுதிப்போட்டியில், அகத்சுகி அணி, 17-15 என்ற புள்ளிகளில் கிரேவிட்டி பைட்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.