/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுபோதையில் பெண் 'மட்டை' காந்திபுரம் பகுதியில் பரபரப்பு
/
மதுபோதையில் பெண் 'மட்டை' காந்திபுரம் பகுதியில் பரபரப்பு
மதுபோதையில் பெண் 'மட்டை' காந்திபுரம் பகுதியில் பரபரப்பு
மதுபோதையில் பெண் 'மட்டை' காந்திபுரம் பகுதியில் பரபரப்பு
ADDED : ஆக 12, 2024 08:51 PM
கோவை:காந்திபுரத்தில் மதுபோதையில் பெண் படுத்திருந்த நிலையில், சடலமாக கிடப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே, 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிக்னலையொட்டி நேற்று மாலையில், மது போதையில் மட்டையாகி கிடந்தார். அப்பெண் படுத்திருப்பதை பார்த்த பலரும் உயிரிழந்து கிடப்பதாக நினைத்து, அருகே சென்று பார்த்தனர்.
ஆனால், அவர் மது போதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது. அவர் முகத்தில் பெண் ஒருவர் தண்ணீர் தெளித்தும் போதை தெளியவில்லை.
அங்கு ரோந்து பணியில் இருந்த காட்டூர் போலீசாரும், பெண்ணின் போதை நிலையை அறிந்து அப்படியே விட்டு சென்றனர். இரவு, 7:00 மணி வரையும் அப்பெண் அப்படியே படுத்து கிடந்தார். பெண் உயிரிழந்து கிடந்ததாக, பரவிய தகவலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.