/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டெல்டா சிட்டி' குடியிருப்பு கொடிசியா அருகே அறிமுகம்
/
'டெல்டா சிட்டி' குடியிருப்பு கொடிசியா அருகே அறிமுகம்
'டெல்டா சிட்டி' குடியிருப்பு கொடிசியா அருகே அறிமுகம்
'டெல்டா சிட்டி' குடியிருப்பு கொடிசியா அருகே அறிமுகம்
ADDED : செப் 10, 2024 01:51 AM

கோவை:டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில், 'டெல்டா சிட்டி' எனும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், கொடிசியா - தண்ணீர்பந்தல் சாலை அருகே துவங்கப்பட்டது.
திட்டத்தை, டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா, மூத்த துணைத் தலைவர் சுரேஷ் குமார், துணை பொது மேலாளர் ரத்தின மூர்த்தி, மார்க்கெட்டிங் துறை தலைவர் ஜோஷ்வா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ், 1பி.எச்.கே.,ரூ.30.99 லட்சத்துக்கும், 2 பி.எச்.கே., ரூ.54 லட்சத்துக்கும் மற்றும் 3 பி.எச்.கே., ரூ.74 லட்சத்துக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முறையான வாஸ்து அடிப்படையில், வடிவமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜிங் வசதி, 24 மணி நேர சி.சி.டி.வி., கண்காணிப்பு, மேம்பட்ட கழிவுநீர் மேலாண்மை, போன்ற நவீன வசதிகள் உள்ளன.
டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின், மூத்த துணைத் தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், ''இந்த அடுக்குமாடி குடியிருப்பு, ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட முதல் அடுக்குமாடி குடியிருப்பாகும். 80 பிளாட்டுகள் உள்ளன. இவற்றில், 70 சதவீதத்துக்கு அதிகமான பிளாட்டுகள், முன்பதிவு செய்யப்பட்டு விட்டன,'' என்றார்.