/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்சில் 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகம்
/
அரசு பஸ்சில் 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகம்
ADDED : செப் 05, 2024 12:16 AM

கோவை : தொலைதூர பஸ்களில் பயணம் செய்பவர்கள், அதற்கான டிக்கெட்டில் கூடுதல் கட்டணம் செலுத்தி, டவுன் பஸ்களிலும் பயணம் செய்யும், 'லிங்க் டிக்கெட்' வசதியை, கோவையில் அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து, தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய, பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அவ்வாறு, முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, லிங்க் டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, முன்பதிவு டிக்கெட் கட்டணத்தில் கூடுதலாக ரூ.30 செலுத்தி, பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, டவுன் பஸ்களில் வேறு இடங்களுக்குச் செல்லலாம். வேறு இடங்களில் இருந்து, இந்த மூன்று பஸ் ஸ்டாண்டுகளுக்குச் செல்லலாம்.
இந்த வசதியை, காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ, பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோவை மண்டல டவுன் பஸ்களில், தங்களின் பயண நேரத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பு அல்லது பின்பு பயன்படுத்தலாம்.
முன்பதிவு பயணச்சீட்டை நகல் எடுத்தோ, செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்தோ, கண்டக்டரிடம் காட்டி பயணிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.