தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு


ADDED : ஜூலை 06, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், கடந்த 1ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கியது.

ஒரு வாரத்துக்கு அந்தந்த வகுப்பு துறை சார்பில், பாடத்திட்டங்கள், தேர்வு எழுதும் முறை குறித்து, மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. வணிகவியல் துறை சார்பாக அறிமுக பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் சிவஞான சித்தி, தமிழக அரசால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது குறித்து விளக்கினார். மாணவர்கள் தேர்வெழுதுவது, வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து, உதவி பேராசிரியர் தங்கராஜ், கல்லுாரி வகுப்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் குறித்து பேராசிரியர் சின்னமணி விளக்கினர். இதேபோல், ஒவ்வொரு வகுப்பு துறை வாரியாக மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us