ADDED : மே 10, 2026 10:11 PM

காந்திபுரம்: காங்., தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி., 257வது மாநில செயற்குழு கூட்டம், காந்திபுரத்தில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதிய அரசு, குறைந்தபட்ச கூலி சட்டத்தில் ‘அப்ரன்டீஸ்’ என்ற சொல்லை நீக்கி, குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.1,000 ஆக நிர்ணயிக்க வேண்டும், மூடப்பட்டுள்ள 23 என்.டி.சி., மில்களை இயக்கி, 50 சதவீத ஊதிய நிலுவையைப் பெற்றுத் தர வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும், குறைந்தபட்ச போனஸ் 15 சதவீதமாக உயர்த்த சட்ட திருத்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ.120 செலுத்தி சிகிச்சை பெறும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநில தலைவர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கோவை செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
