/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம்: ஆவணங்களுடன் புகார் அளிக்க அழைப்பு

ADDED : ஜூலை 11, 2024 06:23 AM
கோவை : நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்தவர்கள், தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை, உடையாம்பாளையத்தில் உள்ள அபார்ட்மென்டில், 'சர்வா ஐடெக் சொல்யூசன்ஸ் லிட்' நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிதி நிறுவனம், பொது மக்களிடம் பெறப்படும் முதலீடு தொகைக்கு, அதிக வட்டி தருவதாகவும், மேலும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் எனவும், ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை பெற்றுக்கொண்டது.
ஆனால், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால், கோவை பொருளாதார குற்றப்பிரிவில் பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர்கள் ரிதுவர்ணன், கவுத் ஸ்ரீஹரி, வெலக்கப்பாடி பாலன் நாராயணன் ஆகியோர் மீதும், வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது.
இவ்வழக்கின் இறுதி அறிக்கை, 'டான்பிட்' கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, இந்நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து, கிடைக்காதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.