/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
/
முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஜூன் 18, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:அருந்ததியர் கூட்டுறவு வணிகர் கூட்டமைப்பு சார்பில், 'உழவன் மளிகை மண்டி' திட்டம் செயல்படுத்தும் வகையில், வணிகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம், பேரூர் அருந்ததியர் சமூக மடத்தில் நடந்தது.
அருந்ததியர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 100 பேர் ஒருங்கிணைந்து முதலீடு செய்து, 'உழவன் மளிகை மண்டி' திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளனர். இத்திட்ட செயல்பாடு குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், வணிக வரித்துறை அதிகாரி ஜெயஸ்ரீ, கோவை மின்சார வாரிய உதவி பொறியாளர் சரவணக்குமார், மாநில எஸ்சி.,எஸ்டி., கமிஷன் முன்னாள் உறுப்பினர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.