/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய நிகழ்வில் பங்கேற்க அழைப்பு
/
இலக்கிய நிகழ்வில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 06, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம் : கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், கோவில்பாளையம், கோவை வித்யாஸ்ரம் பள்ளியில், வரும் 11ம் தேதி காலை 9:30 மணிக்கு இலக்கிய விழா நடக்கிறது.
துடியலூர் தமிழ் சங்கத்தலைவர் கலையரசன்தலைமை வகித்து பேசுகிறார். 'சமுதாய மாற்றத்தை தருவதில் பெரிதும் துணை நிற்பது, கலாசாரமா, கணினியா,' என்னும் தலைப்பில், புலவர் அரங்க வள்ளியப்பன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
'விழாவில் பங்கேற்று, இலக்கிய அமுதம் பருக வாருங்கள்,' என தமிழ் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.