/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம்'; அன்னுாரில் தொல்லியல் ஆய்வில் தகவல்
/
'2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம்'; அன்னுாரில் தொல்லியல் ஆய்வில் தகவல்
'2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம்'; அன்னுாரில் தொல்லியல் ஆய்வில் தகவல்
'2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம்'; அன்னுாரில் தொல்லியல் ஆய்வில் தகவல்
ADDED : பிப் 21, 2025 11:21 PM
அன்னுார் ; 'அன்னூர் அருகே கதவுகரையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பொருட்கள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன,' என தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார், ஒருங்கிணைப்பாளர் பொன்னுச்சாமி ஆகியோர் அன்னூர், கதவுகரை, எல்லப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் கண்டறியப்பட்ட விபரங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது : ஏறத்தாழ, 2,300 ஆண்டுகளுக்கு, முன்பே, அன்னுார் பகுதியில் இரும்பை உருக்கி, வேளாண் பணிக்கு பயன்படுத்தி உள்ளனர். இரும்பு கழிவுகள், கதவுகரை, அச்சம் பாளையம் பகுதியில் உள்ளன.
இப்பகுதியில் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வட்டமும், முதுமக்கள் தாழியும் உள்ளன. இங்கு 53 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன. இவை வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்களுடன் உள்ளன.
கல் வட்டெழுத்து மூலம் இங்கு ஊர் சபை செயல்பட்டதை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இடைக்காலத்தில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் குறித்தும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் பெரு வழிகளில் பயணம் செய்த வணிகர்கள் திருடர்களிடம் இருந்து தங்களையும், தங்கள் உடமையையும் பாதுகாத்துக் கொள்ள அடி கீழ்த்தளம் அன்னுார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இவை 12ம் நூற்றாண்டில் இருந்துள்ளது.
இங்கு சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வில்வீரன், போரில் மாண்ட வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் ஆகியவையும் இங்கு கண்டறியப்பட்டன. இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன், மற்றும் விவசாயி சுந்தரம் ஆகியோருடைய உதவியால் இவை அங்குள்ள தர்மராஜா கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்னுார் பகுதியில் 800 ஆண்டுகள் பழமையான திருஞானசம்பந்தர் மடம் செயல்பட்டு வந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரு வாரங்களுக்கு பிறகு கதவுகரை பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

