/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவில் குளறுபடி; பா.ஜ., வாக்குவாதம்
/
ஓட்டுப்பதிவில் குளறுபடி; பா.ஜ., வாக்குவாதம்
ADDED : ஏப் 05, 2024 10:44 PM
உடுமலை : சட்டசபை தொகுதி வாரியாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக வீட்டிலேயே ஓட்டளிக்கும் நடைமுறை நேற்று துவங்கியது.
உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில், அதிகாரிகள் குழுவினர், இந்த ஓடடுப்பதிவின் போது, தி.மு.க., வினருக்கு சாதகமாக செயல்பட்டதாக பா.ஜ., வினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வீதம்பட்டி கிராமத்தில், அதிகாரிகளுடன், பா.ஜ., ஒன்றிய தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள், வீட்டிலேயே ஓட்டளிக்கும் திட்டத்தில், அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தினர். தேர்தல் கமிஷனின் எவ்வித வழிகாட்டுதலையும், அதிகாரிகள் பின்பற்றாமல், தி.மு.க., வினருக்கு சாதகமாக செயல்பட்டனர்.
கூட்டமாக அக்கட்சியினர் ஓட்டளிக்கும் வீடுகளுக்கு அணி வகுத்து சென்றது உட்பட பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவு உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

