/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோய் குணமாக்கும் இடமா... நோய் உற்பத்திக்கான களமா?
/
நோய் குணமாக்கும் இடமா... நோய் உற்பத்திக்கான களமா?
ADDED : ஏப் 27, 2024 01:59 AM

கோவை;கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசுவது, கோவை அரசு மருத்துவமனையில், தொடர் கதையாகி வருவதாக, நோயாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு, பல ஆயிரம் நோயாளிகள் வருகின்றனர்.
உயர் சிகிச்சை சிறப்பாக அளிக்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கே உண்டான அலட்சியம், லஞ்சம் ஆகியவற்றுக்கு, இம்மருத்துவமனையும் விதிவிலக்கல்ல.
சாக்கடை அடைத்து, கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுவது, மருத்துவமனையில் தொடர்கதையாகி வருகிறது.
நேற்று முன் தினம், மருத்துவமனையின் நுழைவாயில் அருகே உள்ள அம்மா உணவகத்தின் முன், சாக்கடை கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி, கடும் துர்நாற்றம் வீசியது.
நேற்று மாலை வரை கழிவுநீர் வெளியேறியபடி இருந்தது.
நோய்களை குணமாக்கும் இடமாக, இருக்க வேண்டிய அரசு மருத்துவமனை, நோய்களை உற்பத்தி செய்யும் மையமாக மாறி வருகிறது.
கழிவுநீர் வெளியேற, கடந்த நுாற்றாண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறையையே இப்போதும் பின்பற்றுவதாலேயே, பிரச்னை தொடர்கிறது.

