/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டீ டைமர்' பரிசோதனை தேவைதானா... யார், யார் செய்து கொள்வது பாதுகாப்பு?
/
'டீ டைமர்' பரிசோதனை தேவைதானா... யார், யார் செய்து கொள்வது பாதுகாப்பு?
'டீ டைமர்' பரிசோதனை தேவைதானா... யார், யார் செய்து கொள்வது பாதுகாப்பு?
'டீ டைமர்' பரிசோதனை தேவைதானா... யார், யார் செய்து கொள்வது பாதுகாப்பு?
ADDED : ஜூன் 30, 2024 12:43 AM

கொரோனா தாக்குதலுக்குப் பின், பல டாக்டர்கள் 'டீ டைமர்' பரிசோதனை செய்து அறிக்கையுடன் வருமாறு கூறுகின்றனர். இந்த பரிசோதனை தேவைதானா? என்பதில், டாக்டர்கள் மத்தியிலும் கருத்து வேற்றுமைகள் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குப் பின், இளம் வயது மாரடைப்பு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களுக்கு ரத்த உறைதல், ரத்த அணுக்கள் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான 'அஸ்ட்ராஜெனகா' தனது அறிக்கையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதிலும் அரிதாக, டி.டி.எஸ்., என்ற ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, ஒப்புக் கொண்டுள்ளது.
கேரளாவில் பரவலாக நோட்டீஸ்
அஸ்ட்ராஜெனகாவின் இந்த ஒப்புதல், இந்திய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த தகவல் வந்த சில நாட்களில், கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 'டீ டைமர்' எனப்படும் ரத்த உறைதல் பரிசோதனை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.
மருத்துவமனைகளிலும் அந்த நோட்டீஸ்களை ஒட்டி வந்தனர். தற்போது அந்த தகவல் கோவையிலும் வலம் வர துவங்கி உள்ளது. இதனால் மக்கள், யார் யார் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவர்(ஆர்.எம்.ஓ.,) சவுந்தரவேல் கூறியதாவது:
வெளிநாடுகளில்தான் அதிகளவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கேரள மக்களில் அதிகம் பேர், வெளிநாட்டில் பணியில் இருந்தவர்கள் என்பதால், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டிருப்பர்.
இதனால் கேரளாவில், டீ டைமர் பரிசோதனை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் கோவையில் இந்த அச்சம் தேவையில்லை. யாருக்கும் டீ டைமர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படவில்லை.
கொரோனா தொற்று ஏற்பட்டு, மீண்டவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு, இடுப்பு மூட்டு பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. அவர்களில் சிலருக்கு கால் வீக்கம், கால் சிவப்பாக மாறுவது, நடக்க முடியாமல் அவதி, காலில் தாங்க முடியாத வலி உள்ளது. ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
நெஞ்சு வலி, இருதய துடிப்பு அதிகரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், ஆக்சிஜன் அளவு குறைவு போன்ற பிரச்னை இருந்தால் டீ டைமர் பரிசோதனை மேற்கொள்ளலாம். ரத்த உறைதல் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான சிசிக்சை உள்ளது.
பொதுவாக வெள்ளை இனத்தவர்களுக்கும், இந்தியர்களுக்கும் வேறுபாடு உள்ளது, நம் உணவிலும் மாறுபாடுகள் உள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசி பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
அடுத்தடுத்த கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட போதும், இந்தியாவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நெஞ்சு வலி, இருதய துடிப்பு அதிகரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், ஆக்சிஜன் அளவு குறைவு போன்ற பிரச்னை இருந்தால் டீ டைமர் பரிசோதனை மேற்கொள்ளலாம். ரத்த உறைதல் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான சிசிக்சை உள்ளது.