/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேசத்தவர் ஊடுருவல் உள்ளதா? சமூக வலைதளங்களில் கண்காணிப்பு
/
வங்கதேசத்தவர் ஊடுருவல் உள்ளதா? சமூக வலைதளங்களில் கண்காணிப்பு
வங்கதேசத்தவர் ஊடுருவல் உள்ளதா? சமூக வலைதளங்களில் கண்காணிப்பு
வங்கதேசத்தவர் ஊடுருவல் உள்ளதா? சமூக வலைதளங்களில் கண்காணிப்பு
ADDED : செப் 04, 2024 12:50 AM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டத்தில், வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா என சமூக வலைதளங்களில் வாயிலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக, நமது நாட்டுக்குள் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக நுழைய வாய்ப்புள்ளதாக என மத்திய உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தொழில் நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் பணிபுரியலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வங்கதேசத்தினர் யாராவது சட்டவிரோதமாக வந்துள்ளனரா; தொழில்நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிகின்றனரா என போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தொழில்நிறுவனங்கள், விவசாய தோட்டங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அவர்கள் தங்கள் நாட்டின் நிலைமையை இங்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்து பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இது போன்ற செயல்களை கண்காணிக்க, குழு அமைத்துள்ளோம். அவர்கள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.--