/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீரை சாகுபடியில் அதிக வருவாய்; 'ஈஷா மண் காப்போம்' அழைப்பு
/
கீரை சாகுபடியில் அதிக வருவாய்; 'ஈஷா மண் காப்போம்' அழைப்பு
கீரை சாகுபடியில் அதிக வருவாய்; 'ஈஷா மண் காப்போம்' அழைப்பு
கீரை சாகுபடியில் அதிக வருவாய்; 'ஈஷா மண் காப்போம்' அழைப்பு
ADDED : மார் 29, 2024 10:30 PM
பொள்ளாச்சி:எளிய முறையில் கீரை சாகுபடி செய்து அதிக வருவாய் பெறலாம் என, படித்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில், கீரை சாகுபடி களப்பயிற்சி, கோவை செம்மேடு, ஈஷா இயற்கை விவசாய பண்ணையில், ஏப்., 7ம் தேதி, காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில், தினமும் வருமானம் தரும் எளிய கீரை சாகுபடி முறைகள், 10 சென்ட் நிலத்தில் வருவாய் தரும் கீரைகள், பாத்திகள் மற்றும் மேட்டுப் பாத்திகளை அமைக்கும் முறைகள், கைகளால் பாத்திகள் அமைத்து விதைக்கும் முறைகள் விளக்கப்படவுள்ளது.
இதற்கு, முன்பதிவு அவசியம். பயிற்சி கட்டணமாக, 200 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, https://forms.gle/JxToRiaRNbwm5xS39 என்ற லிங்க்கை பயன்படுத்தலாம்.
மேலும், 83000 93777, 94425 90077 ஆகிய மொபைல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு, அவரவர் பயிற்சிக்கான வருகையை உறுதி செய்து கொள்ளலாம். இதேபோல, பயிற்சிக்கான வாட்ஸாப் குழுவுக்கு, https://chat.whatsapp.com/KxczbpDZ7dP0XlTdisNdL0 லிங்க்கில் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

