/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்தது காய்ச்சல் பாதிப்பு: குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
/
குறைந்தது காய்ச்சல் பாதிப்பு: குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
குறைந்தது காய்ச்சல் பாதிப்பு: குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
குறைந்தது காய்ச்சல் பாதிப்பு: குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
ADDED : மே 27, 2024 11:43 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக குறைந்துள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
அப்போது, ஐஸ் வாட்டர் பயன்பாடு, சீரற்ற குடிநீர் வினியோகத்தால், பாத்திரங்களில் நீண்ட நாட்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தியதால், பலரும் டைபாய்டு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வழக்கமாக, 50 பேர் வரை மட்டுமே காய்ச்சல் சிகிச்சைக்கு வந்து சென்ற நிலையில், அதன் எண்ணிக்கை 100யை கடந்தது. ஆனால், சமீபத்தில் தொடர் மழை பெய்யும் நிலையில், காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. இதனால், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இது குறித்து, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் வழக்கமாக, தினமும், 50க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் சிகிச்சைக்காக வந்து செல்வர். அந்த எண்ணிக்கை தற்போது, 50க்கும் குறைவாகவே உள்ளது. சுற்றுப்புறத்தை துாய்மையாகவும், டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகாமல், நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.