/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்காச்சோளம் விதைக்கும் நேரமிது; வேளாண் பல்கலை வழிகாட்டுகிறது
/
மக்காச்சோளம் விதைக்கும் நேரமிது; வேளாண் பல்கலை வழிகாட்டுகிறது
மக்காச்சோளம் விதைக்கும் நேரமிது; வேளாண் பல்கலை வழிகாட்டுகிறது
மக்காச்சோளம் விதைக்கும் நேரமிது; வேளாண் பல்கலை வழிகாட்டுகிறது
ADDED : ஆக 03, 2024 10:03 PM
கோவை: ஆடிப்பட்டம் மக்காச்சோளத்தை இறவையில் விதைக்க உகந்த காலம் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவையில் வரும் நாட்களில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 30-32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20-22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 80-90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 50-70 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
சராசரியாக காற்று மணிக்கு, 12-16 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். பெரும்பாலும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மழை எதிர்பார்க்கப்படுவதால் சமீபத்தில், நடவு செய்த நெல் வயலில் போதிய வடிகால் வசதி மேற்கொள்ள வேண்டும்.
மக்காச்சோளம் விதைக்கலாம்
ஆடிப்பட்டம் மக்காச்சோளத்தை, இறவையில் விதைக்க இது உகந்த காலமாகும். விதைகளை மெட்டாலாக்சில் 35 சதவீதம், டபிள்யூ.எஸ்., 750 கிராம், 100 கிலோ விதையுடன் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.