/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரிய தாவரங்களை பாதுகாப்பது அவசியம்! பயிற்சி வகுப்பில் அறிவுரை
/
அரிய தாவரங்களை பாதுகாப்பது அவசியம்! பயிற்சி வகுப்பில் அறிவுரை
அரிய தாவரங்களை பாதுகாப்பது அவசியம்! பயிற்சி வகுப்பில் அறிவுரை
அரிய தாவரங்களை பாதுகாப்பது அவசியம்! பயிற்சி வகுப்பில் அறிவுரை
ADDED : மார் 14, 2025 10:56 PM

பொள்ளாச்சி; ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. வனப்பகுதியில் பழமை வாய்ந்த மூலிகை செடிகள், மரங்களும் அதிகளவு உள்ளன.
இதுபோன்ற மரங்கள் அழியாமல் பாதுகாக்கவும், மற்ற பகுதிகளில் இதை வளர்த்திடவும், கோவை வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு பிரிவு சார்பில், அவ்வப்போது மரங்கள் தேர்வு செய்து அடையாளப்படுத்த சிவப்பு நிற குறியீடு வரைந்து பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற மீள்தன்மைக்கான பசுமையாக்கும் திட்டம் மற்றும் கோவை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனம் சார்பில், 25 முன்னுரிமை பெற்ற, அரிய வகை, அழிந்து வரும், அச்சுறுத்தலுக்கு ஆளான தாவரங்களை பட்டியலிடப்பட்டன.
இந்த அரிய வகை தாவரங்கள், மரங்களை பாதுகாத்தல் மற்றும் கணக்கெடுத்தல் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி, அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது. முதன்மை வனப்பாதுகாவலரும், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற மீள்தன்மைக்கான பசுமையாக்கும் திட்ட இயக்குனர் அன்வர்தீன், வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தார். ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அழிவில் இருந்து பாதுகாக்க, 25 அரிய வகை தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், 10 தாவரங்கள், மிகவும் ஆபத்தானவை. ஐந்து தாவரங்கள் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன. இவை, மாநிலத்தின் பல்வேறு வனப்பகுதிகளில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், பிலாந்தஸ் ஆனைமலையனா, டிஸ்கவரிங் ஆனைமலையனா, சைக்கோஸ்திரியா ஆனைமலை, காத்தாடி மரம் என நான்கு வகையான தாவரங்கள் உள்ளன. இவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டுமே உள்ள, 500 ஆண்டுகள் பழமையானதாகும்.
அவற்றை பாதுகாக்கும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. களப்பணியாளர்களை அழைத்துச் சென்று அழிந்து வரும் அரிய வகையான தாவரங்கள் களத்தணிக்கையின் போது அடையாளம் காண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தாவரங்களை கண்டறிந்து, பாதுகாப்பது, மீட்டெடுப்பது தான் இதன் செயலாகும். கேமரா டிராப் வைத்து கண்காணிப்பு செய்ய பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது. அதில், மரங்களை தொடர்ந்து கண்காணித்து, எந்த மாதங்களில் பூ பூக்கிறது; அதன் பழங்களை எந்த வனவிலங்குள் உட்கொள்கின்றன, சரியான மாதங்களில் பூக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
மரங்கள் சரியான நேரத்துக்கு காய் காய்க்காமலும், பூ பூக்காமல் இருந்தால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க அறிவுறுத்தப்பட்டது. பழமையான மரங்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.