/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளாட்சிகளில் தொழில் நிறுவனங்கள் அனுமதியை உறுதிப்படுத்துவது அவசியம்
/
உள்ளாட்சிகளில் தொழில் நிறுவனங்கள் அனுமதியை உறுதிப்படுத்துவது அவசியம்
உள்ளாட்சிகளில் தொழில் நிறுவனங்கள் அனுமதியை உறுதிப்படுத்துவது அவசியம்
உள்ளாட்சிகளில் தொழில் நிறுவனங்கள் அனுமதியை உறுதிப்படுத்துவது அவசியம்
ADDED : மே 30, 2024 11:40 PM
பொள்ளாச்சி;பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள்; சமத்துார், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார், கிணத்துக்கடவு மற்றும் நெகமம் ஆகிய பேரூராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என, பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில், சேர்க்கப்படுகிறது.
இருப்பினும், சில ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: ஊராட்சி மற்றும் பேரூராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, அரசியல் கட்சியினரும் துணை நிற்கின்றனர். தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
சொத்துவரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என, வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக் கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இவ்வாறு, கூறினர்.