/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வழிபாட்டு கடமையை நிறைவேற்றுவது அவசியம்'
/
'வழிபாட்டு கடமையை நிறைவேற்றுவது அவசியம்'
ADDED : ஆக 03, 2024 09:53 PM

ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்து வரும், ஆடி உற்சவத்தையொட்டி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
இதில், பிரம்மஸ்ரீ ஆங்கரை ரங்கசாமி தீட்சிதர் வால்மீகிராமாயணம் குறித்து, சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:
குழந்தைகள் சமத்தாக இருந்தால், பெற்றோருக்கு நற்பெயர் கிடைக்கும். அதேசமயம் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் இருந்தால், பெற்றோருக்கு மேலும் பெருமை ஏற்படும். அந்த வகையில், ஸ்ரீ ராமரும், ஸ்ரீ லட்சுமணரும் திகழ்ந்தனர். அவர்கள், ராஜரிஷி விஸ்வாமித்திரரிடமிருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டனர்.
அவரும் பல மந்திரங்களை இருவருக்கும் அனுக்கிரஹம் செய்தார். பெற்றோருக்கு பெருமையை தேடித்தந்தனர். அது போல இன்றைய குழந்தைகள் திகழ வேண்டும். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர் அவர் வழிபாட்டுக்கடமைகளை கடமை தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.
மனிதர்களாக பிறந்த நாம் வழிபாட்டுக் கடமைகளை, தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அப்போது நம் வாழ்வு சிறக்கும். தெய்சக்தி பலம்பெறும். தர்மம் பிரளாமலும், நீதி வழுவாமலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.