/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
/
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
ADDED : மே 13, 2024 01:01 AM
கோவை;கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு, மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன் படி, அதிகபட்ச வெப்பநிலை 34-38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-23 டிகிரி செல்சியஸ் ஆகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரம் 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு, 4-8 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்பாசனத்தை ஒத்திவைக்கவும்; பயிர் கழிவு மூடாக்கு செய்யவும். மழையினை பயன்படுத்தி, சரிவுக்கு குறுக்காக மண் புரட்டிப்போடும் கலப்பை கொண்டு கோடை உழவினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மஞ்சள் நடவு செய்ய, உகந்த தருணம் என்பதால், வயலை உழவு செய்து பண்படுத்தி வைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.