/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
/
அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
ADDED : மே 14, 2024 11:30 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், அடுத்த நான்கு நாட்களுக்கு, மிதமானது முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன் படி, அதிகபட்ச வெப்பநிலை 34-38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-23 டிகிரி செல்சியஸ் ஆகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரம் 40 சதவீதமாகவும் இருக்கும்.
சராசரியாக, காற்று மணிக்கு, 4-8 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்பாசனத்தை ஒத்திவைக்கவும். பயிர் கழிவு மூடாக்கு செய்யவும்.
மழையினை பயன்படுத்தி, சரிவுக்கு குறுக்காக மண் புரட்டிப்போடும் கலப்பை கொண்டு கோடை உழவினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மஞ்சள் நடவு செய்ய, உகந்த தருணம் என்பதால், வயலை உழவு செய்து பண்படுத்தி வைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

