/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் முடிந்து 3 வருஷமாச்சு... டெபாசிட் பணம் மறந்தே போச்சு!
/
தேர்தல் முடிந்து 3 வருஷமாச்சு... டெபாசிட் பணம் மறந்தே போச்சு!
தேர்தல் முடிந்து 3 வருஷமாச்சு... டெபாசிட் பணம் மறந்தே போச்சு!
தேர்தல் முடிந்து 3 வருஷமாச்சு... டெபாசிட் பணம் மறந்தே போச்சு!
ADDED : பிப் 27, 2025 12:12 AM
கோவில்பாளையம்: தேர்தல் முடிந்து மூன்று வருடமாகியும், டெபாசிட் தொகை திருப்பித் தரவில்லை என புகார் எழுந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அன்னூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் கவுன்சிலர் தேர்தல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டனர். போட்டியிட்டவர்களில் தோல்வி அடைந்தவர்களும், மனுவை வாபஸ் பெற்றவர்களும், தங்களுக்கு இன்னும் டெபாசிட் பணம் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் கூறுகையில்,'வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மனுவை வாபஸ் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள், பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஒட்டு பெற்றவர்களுக்கு, செலுத்திய டெபாசிட் தொகை ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படவில்லை. இது குறித்து, அன்னூர் பேரூராட்சியில் கேட்டும் இன்னும் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படவில்லை' என்றனர்.