/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெயரை சொல்லவே கூசுகிறது! பிரசாரத்தில் நமீதா காட்டம்
/
பெயரை சொல்லவே கூசுகிறது! பிரசாரத்தில் நமீதா காட்டம்
பெயரை சொல்லவே கூசுகிறது! பிரசாரத்தில் நமீதா காட்டம்
பெயரை சொல்லவே கூசுகிறது! பிரசாரத்தில் நமீதா காட்டம்
ADDED : ஏப் 10, 2024 12:22 AM

நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் முருகனை ஆதரித்து, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா அன்னுார் அருகே பொகலூரில் பேசினார்.
நடிகை நமீதா பேசியதாவது:
நீலகிரி தொகுதி எம்.பி.,யின் (தி.மு.க., ராஜா) பெயரைச் சொல்வதற்கே கூசுகிறது. அவர் தெய்வங்களை, பெண்களை இழிவாக பேசுகிறார். கொரோனா காலத்தில் அதிகம் பேர் உயிரிழக்காமல் நடவடிக்கை எடுத்தவர் மோடி. கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு இலவசமாக அளித்தார். இந்தியாவின் விஸ்வகுரு மோடி. மோடிக்கு ஓட்டு போட்டால் நல்ல நிலையில் இருக்கலாம். 400 எம்.பி.,க்களுடன் மோடி வெற்றி பெற வேண்டும். மோடி எங்கு சென்றாலும், நம் தமிழ் கலாசாரம் பற்றி பாராட்டி பேசுகிறார்.
இவ்வாறு நமீதா பேசினார்.
நமீதாவுடன் பெண்கள், சிறுவர்கள் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.