/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாக்கு, ஜாதிக்காய் ஆனைமலையில் ஏலம்
/
பாக்கு, ஜாதிக்காய் ஆனைமலையில் ஏலம்
ADDED : பிப் 10, 2025 05:56 AM
பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், '-இ -நாம்' திட்டம் வாயிலாக, பாக்கு, ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி மறைமுக ஏலம் நேற்று நடந்தது. அதன்படி, இரு விவசாயிகள், 3 பாக்கு மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனர்.
மூன்று வியாபாரிகள் பங்கேற்றிருந்த நிலையில், அதிகபட்சமாக கிலோ பச்சைப் பாக்கு, 45 ரூபாய்க்கும், பழம் பாக்கு 57 ரூபாய்க்கும், காய்ந்த பாக்கு 146 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதேபோல, மூன்று விவசாயிகள், 4 ஜாதிக்காய் மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனர். 4 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில் கிலோ ஜாதிக்காய், அதிகபட்சமாக 360 ரூபாய்க்கும் குறைந்தபட்சம், 330 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தவிர, இரு விவசாயிகள், 2 ஜாதிப்பத்திரி மூட்டை கொண்டு வந்திருந்த நிலையில், 4 வியாபாரிகள் பங்கேற்னறனர். அதன்படி, அதிகபட்சமாக கிலோ ஜாதிப்பத்திரி, 1,950 ரூபாய்க்கு விற்பனையானது.
இத்தகவலை, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொ) செந்தில்முருகன் தெரிவித்தார்.