/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 06:48 AM

பொள்ளாச்சி; கோவை மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர் சின்னமாரிமுத்து தலைமை வகித்தார். பொறுப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் தங்கபாசு, தமிழ்நாடு நிதி உதவி பெறும் கல்லுாரி அலுவலக சங்க மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2003ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வால்பாறை
வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் பரமசிவன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் முத்தையாசாமி நன்றி கூறினார்.

