/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாலுகா அலுவலகத்தில் வரும் 20ல் ஜமாபந்தி துவக்கம்
/
தாலுகா அலுவலகத்தில் வரும் 20ல் ஜமாபந்தி துவக்கம்
ADDED : ஜூன் 13, 2024 11:19 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வரும், 20 முதல், 27ம் தேதி வரையும், ஆனைமலையில், வரும், 20 முதல் 25ம் தேதி வரையும் ஜமாபந்தி நடக்கிறது.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில், வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஜமாபந்தி துவங்குகிறது.
முதல் நாள், ராமபட்டணம் உள்வட்டத்துக்கு உட்பட்ட புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், தேவம்பாடி, ராமபட்டிணம், மண்ணுார், குமாரபாளையம், திம்மங்குத்து, நல்லுாத்துக்குளி, அய்யம்பாளையம், ஜமீன்முத்துார், தாளக்கரை, போடிபாளையம், ராசிசெட்டிபாளையம், குளத்துார் கிராமங்களுக்கு நடக்கிறது.
வரும், 21ல், வடக்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட பூசநாயக்கன்தளி, குள்ளிசெட்டிபாளையம், சந்தேகவுண்டன்பாளையம், ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம், சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம், ஆச்சிப்பட்டி, குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி, வெள்ளாளபாளையம், அனுப்பர்பாளையம், ராசக்காபாளையம், புளியம்பட்டி, கிட்டசூரம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, சங்கம்பாளையம், பொள்ளாச்சி நகர பகுதிகளுக்கு நடக்கிறது.
வரும், 25ல், தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி கிராமங்களுக்கும்; 26ம் தேதி, நெகமம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், என்.சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ.நாகூர், கொல்லப்பட்டி, போலிகவுண்டம்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி கிராமங்களுக்கு நடக்கிறது.
வரும், 27ம் தேதி, கோலார்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், கோமங்கலம்புதுார், எஸ்.மலையாண்டிப்பட்டணம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்படி, சிஞ்சுவாடி கிராமங்களுக்கு நடக்கிறது.
ஆனைமலை
ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், சப் - கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. வரும், 20ல், ஆனைமலை உள்வட்டத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனுார், தென்சித்துார், சோமந்துரை, தென்சங்கம்பாளையம், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
21ம் தேதி, மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், சிங்காநல்லுார், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், பெரியபோது கிராமங்களுக்கு நடக்கிறது.
வரும், 25ம் தேதி, கோட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட சமத்துார், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, நல்லுார், தொண்டாமுத்துார், கம்பாலபட்டி, கரியாஞ்செட்டிபாளையம், கோட்டூர், அங்கலகுறிச்சி, துறையூர், ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம் கிராமங்களுக்கு நடக்கிறது.
எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசின் நலத்திட்டங்களான முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள், அரசின் பலன்கள், சான்றுகள், பட்டா மாறுதல், நில அளவை, நத்தம் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது பிரச்னைகள் குறித்து மனு கொடுத்து தீர்வு காணலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

