ADDED : மே 09, 2024 11:21 PM
அன்னுார்;அன்னுார் அருகே ஜே.சி.பி., வாகனத்தை உரிமையாளர் இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார்.
அக்கரை செங்கப்பள்ளியில் வரதராஜ் என்பவரது தோட்டத்தில் கல், மண் ஆகியவற்றை சமன்படுத்துவதற்காக நேற்று அதிகாலை ஜே.சி.பி., வாகனம் இயக்கப்பட்டது.
அப்போது வாகன உரிமையாளரான அக்கரை செங்கப்பள்ளி, கவுரிசங்கர், 31. ஜே.சி.பி., வாகனத்தை இயக்கினார்.
வாகனம் பின்புறம் வந்த போது அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜே.சி.பி., வாகனத்தின் கிளீனர் காட்டம்பட்டி, முதலிபாளையத்தை சேர்ந்த வீராசாமி மகன் உதயகுமார், 17. மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
குரும்பபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அன்னுார் போலீசார் ஜே.சி.பி., வாகனத்தை இயக்கிய கவுரி சங்கர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.