/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜுவல் பார்க்; யார்தான் நிறைவேற்றுவார்?
/
ஜுவல் பார்க்; யார்தான் நிறைவேற்றுவார்?
ADDED : மார் 26, 2024 01:29 AM
கோவை:கோவையில் சுமார் 2 லட்சம் தங்கப் பட்டறை தொழிலாளர்கள் உள்ளனர். ஒருங்கிணைந்த தங்க நகைப் பூங்கா, வீடில்லா தொழிலாளர்களுக்கு குடியிருப்பு என்ற இரு எதிர்பார்ப்புகள் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் இவர்கள் கோரிக்கை வைக்க, அவர்களும் வாக்குறுதி கொடுப்பர். ஆனாலும், 'வரும் ஆனா வராது' என்ற கதையாக, ஜுவல் பார்க் கோரிக்கை உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் வானதி சீனிவாசனின் வெற்றியில், தங்கநகைத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனி பகுதி ஓட்டுகள் கணிசமான பங்கு வகித்தன. ஆனாலும், ஒருங்கிணைந்த தங்க நகைப் பூங்கா அமைந்தபாடில்லை. எனவே, இந்த முறையாவது சொன்ன வாக்கை நிறைவேற்றும் வேட்பாளருக்கே ஓட்டு என்பதை தீர்மானமாக தெரிவிக்க, முயன்று வருகின்றனர் தங்க நகைத் தொழிலாளர்கள்.

