/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனலடிக்கும் வெயிலில் கோவை குற்றாலத்தில் 'ஜில்'
/
அனலடிக்கும் வெயிலில் கோவை குற்றாலத்தில் 'ஜில்'
ADDED : ஏப் 22, 2024 01:25 AM

தொண்டாமுத்தூர்;கோவை குற்றாலத்தில், இரண்டு நாட்கள் விடுமுறை தினத்தில், 4,633 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வாரந்தோறும், திங்கள் கிழமை தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, கோவையில் வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையில், கோடை விடுமுறையும் துவங்கியுள்ளதால், கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, 2,437 பேரும், நேற்று 2,196 பேரும் என, இரண்டு நாட்களில் மட்டும், 4,633 சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து, வெப்பத்தை தணித்து சென்றுள்ளனர்.

