/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுதிக்குள் பணி வாய்ப்பு; இ.டி.சி., பயன்படுத்த அறிவுரை
/
தொகுதிக்குள் பணி வாய்ப்பு; இ.டி.சி., பயன்படுத்த அறிவுரை
தொகுதிக்குள் பணி வாய்ப்பு; இ.டி.சி., பயன்படுத்த அறிவுரை
தொகுதிக்குள் பணி வாய்ப்பு; இ.டி.சி., பயன்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 04, 2024 10:43 PM
பொள்ளாச்சி;ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த லோக்சபா தொகுதிக்குள் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால், இ.டி.சி., (எலக் ஷன் டியூட்டி சர்டிபிகேட்)சான்றை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் வரும், 19ல், ஒரே கட்டமாக நடக்கிறது. அவ்வகையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என 'கேடர்' மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில், பி.ஓ., (பூத் அதிகாரி) மற்றும் பி.ஓ., 1 முதல் பி.ஓ., 4 வரையான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொகுதி வாரியாக நடந்தது.
வரும், 7, 16ம் தேதி, அவரவர் பணிக்காக ஒதுக்கப்பட்ட, சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, 18ம் தேதி பணி ஒதுக்கீடு உத்தரவு பெற்று, அவரவர் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடியில் பயிற்சி பெறவும் உள்ளனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட லோக்சபா தொகுதி பகுதிகளில் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு, வரும் 7ல், அவரவர் பணிபுரிய உள்ள சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயிற்சி அளிக்கப்படும். அதன்படி, 18ம் தேதி வழங்கப்படும் பணி ஒதுக்கீடு உத்தரவு பெற்றால் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடி விபரம் தெரியவரும்.
அவர்களில் பலருக்கு, அவரவர் லோக்சபா தொகுதியில் இருந்து, வேறு லோக்சபா தொகுதிக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், தபால் ஓட்டு அளிக்க வேண்டும். அதேநேரம், அந்தந்த லோக்சபா தொகுதிக்குள் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால், இ.டி.சி., (எலக் ஷன் டியூட்டி சர்டிபிகேட்) சான்று பயன்படுத்தி, பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டுப்பதிவு செய்யலாம்.
இவ்வாறு, கூறினர்.

