/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி; ஜாலி ரோவர்ஸ் அணி வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி; ஜாலி ரோவர்ஸ் அணி வெற்றி
ADDED : மே 13, 2024 12:29 AM

கோவை;மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், பிரபாகரன் ஐந்து விக்கெட்கள் வீழ்த்த, ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மாவட்ட கிரிக்கெட் சங்கம்,'லட்சுமி கார்டு குளோத்திங் கோப்பைக்கான' முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது.
இதில் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
மைதானம் ஈரமாக இருந்ததால், 33 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த ஜாலி ரோவர்ஸ் அணியின் நிர்மல் குமார் (64) அரைசதம் அடிக்க, அந்த அணி 33 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்தது.
அடுத்து விளையாடிய ரெயின்போ அணியின் ஹரிஹரன் (30), சாதிக் உல் அமீன் (33) ஆகியோர் நிதானமாக விளையாட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
இதனால் ரெயின்போ அணி 28.4 ஓவர்களில், 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜாலி ரோவர்ஸ் அணியின் பிரபாகரன், சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.