/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கொள்முதலுக்கு ஜூன் 10ந் தேதி கடைசி நாள்
/
கொப்பரை கொள்முதலுக்கு ஜூன் 10ந் தேதி கடைசி நாள்
ADDED : மே 17, 2024 10:41 PM
சூலூர்;செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஜூன் 10 ம்தேதி வரை மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்யப்படும்,என, மேற்பார்வையாளர் அறிவித்துள்ளார்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாகும். இளநீர், தேங்காய் மற்றும் கொப்பரைகள் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. கொப்பரைகள் அரசு கொள்முதல் மையங்கள் மற்றும் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரி மலையடிபாளையத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
இங்கு, கடந்த, மார்ச் 14 ம்தேதி முதல் கொப்பரை கொள்முதல் நடக்கிறது. 4 ஆயிரத்து, 500 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு, ரூ. 111.60 க்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு, ரூ. 120 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
வெளி மார்க்கெட்டை விட, அரசு கொள்முதல் நிலையங்களில் கொப்பரை கொள்முதல் விலை அதிகம் என்பதால், அரசு கொள்முதல் மையங்களை விவசாயிகள் ஆர்வத்துடன் நாடி செல்கின்றனர்.
இதுகுறித்து செஞ்சேரி மலையடிபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறுகையில், மார்ச் 14 முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
வரும் ஜூன் 10 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்கு முன்பாக, கொப்பரை களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து பயனடையலாம், என்றார்.

