/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய கால்பந்து போட்டி அரசுப் பள்ளி முதலிடம்
/
குறுமைய கால்பந்து போட்டி அரசுப் பள்ளி முதலிடம்
ADDED : ஆக 13, 2024 01:30 AM
மேட்டுப்பாளையம்;குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பெத்திக்குட்டை அரசு மேல்நிலை பள்ளி அபார வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
மேட்டுப்பாளையம் குறுமைய அளவிலான, விளையாட்டுப் போட்டிகள், பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கான கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடந்தன. இதில், 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட, மாணவிகளுக்கான கால்பந்து மூன்று பிரிவு போட்டிகளிலும், பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்தது. 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில், சிறுமுகை விஜயலட்சுமி பள்ளியும், 17வயதிற்குட்பட்ட பிரிவில் ஆலாங்கொம்பு அழகிரி சுரேஷ் அரசு உயர்நிலைப்பள்ளியும், 19 வயதிற்குட்பட்ட பிரிவில், மடோனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இரண்டாமிடம் பெற்றன.
மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகளில், 14, 17 வயதிற்குட்பட்ட பிரிவுகளில், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பெற்றது. மடோனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மடோனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், காரமடை வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பெற்றது.