/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சார பில்லை பார்த்தாலே 'ஷாக்' அடிக்குது! அ.தி.மு.க., கூட்டத்தில் எம்.எல்.ஏ., பேச்சு
/
மின்சார பில்லை பார்த்தாலே 'ஷாக்' அடிக்குது! அ.தி.மு.க., கூட்டத்தில் எம்.எல்.ஏ., பேச்சு
மின்சார பில்லை பார்த்தாலே 'ஷாக்' அடிக்குது! அ.தி.மு.க., கூட்டத்தில் எம்.எல்.ஏ., பேச்சு
மின்சார பில்லை பார்த்தாலே 'ஷாக்' அடிக்குது! அ.தி.மு.க., கூட்டத்தில் எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : மார் 07, 2025 08:23 PM
நெகமம்:
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டி, ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
நெகமம், வரதனூர் ஊராட்சி, மூட்டாம்பாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியின் போது, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் இந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
இதற்கு மாறாக, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
தி.மு.க., சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. ஊழல், மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு போன்றவையே தி.மு.க.,வின் சாதனையாகும். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டி, ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசியதாவது:
கடந்த, 4 ஆண்டுகளில், 4 லட்சம் கோடி கடன் ஏற்படுத்தியுள்ளது தி.மு.க., அரசு. பசுமை புரட்சியை ஏற்படுத்தி, இந்தியாவின் பசியாற்றியவர் முன்னாள் மகாராஷ்டிரா கவர்னர் சி.சுப்ரமணியம். அவரது ஊரில் பெரிதாக எந்த திட்டமும் அரசு கொண்டுவரவில்லை.
முன்பெல்லாம், மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். தற்போது, மின்சார பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த பணம் எங்கு செல்கிறது. எனவே, ஊழல் நிறைந்த தி.மு.க., அரசை வரும் சட்டசபை தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பன்னசாமி, ஒன்றிய செயலாளர் (கிணத்துக்கடவு மேற்கு) திருஞானசம்பந்தம் மற்றும் அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.