/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!
/
கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!
கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!
கா.க.,புதுார் பாலம் நீரில் மூழ்கியது; மாற்றுப்பாதையில் பயணியுங்க!
ADDED : ஆக 01, 2024 12:54 AM

ஆனைமலை : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் தொடர்ந்து, மூன்றாவது நாளாக உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை மற்றும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் காரணமாக, ஆழியாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஆழியாறு ஆற்றின் குறுக்கே காளியப்பகவுண்டன்புதுாரில் கட்டப்பட்டுள்ள தரை பாலம் நீரில் மூழ்கியது. எனவே, இந்த ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து, மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தி, தடுப்பு வைத்து ரோட்டை மூடியுள்ளனர்.
மேலும், மாற்று பாதையான, அம்பராம்பாளையம் சுங்கம், மேட்டுக்களம் வழியாக காளியப்பகவுண்டன்புதுார் செல்ல வேண்டும், என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.