/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை உருவாக்க கலாம் குழு முயற்சி
/
பசுமை உருவாக்க கலாம் குழு முயற்சி
ADDED : ஆக 19, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்:எஸ்.எஸ்.குளத்தில், 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கல்லூரி மாணவர்கள் இணைந்து, கலாம் பசுமை குழு என்னும் அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில், மரக்கன்று நடுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், சாலையோரங்களில், புங்கன், வேம்பு, புளி, நாவல் உட்பட, 150 மரக்கன்றுகளை நட்டனர்.
ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கும், பராமரிப்பு பணி மேற்கொண்டனர். இப்பணியில் அமைப்பின் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

