/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கலாஷா' நகை கண்காட்சி இன்றுடன் நிறைவு
/
'கலாஷா' நகை கண்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : ஜூலை 09, 2024 11:50 PM
கோவை;அவிநாசி ரோடு, ரெசிடென்சி டவர்சில், கலாஷாவின் நுண்கலை மற்றும் கைவினை நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது.
அபர்ணா சுங்குவின் வடிவமைப்பில் உருவான, இந்நகை கண்காட்சியில், அழகிய வடிவமைப்பில் தனித்துவமிக்க தங்கம், வைரம் மற்றும் ஜடாவு நகைகள் இடம் பெற்றுள்ளன. கோவில் நகைகள், அழகிய வைரக்கல் பதித்த நகைகள், மணப்பெண்களுக்கான வடிவமைக்கப்பட்ட நகைகளும் உள்ளன.
கலாஷா இயக்குனர் அபிஷேக் சந்தா கூறுகையில், ''கோவை வாடிக்கையாளர்களுக்கென,சர்வதேச அளவில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், உருவாக்கப்பட்ட நகைகள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
இவ்வாறு, அவர் கூறினார். இக்கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.