/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பீர சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
கம்பீர சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 11, 2024 01:01 AM

வடவள்ளி;இடையர்பாளையத்தில், கம்பீர சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.
இடையர்பாளையம், அறிஞர் அண்ணா நகரில், கம்பீர சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, ஐங்கர பெருமான் வேள்வி, முதல் கால வேள்வி நடந்தது.
நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மூர்த்திகளுக்கு காப்பணிவித்தல் நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி, 108 வகையான காய், கனி, மூலிகை பொருட்கள் அருள் நிறையேற்றல் நிறையாகுதி, பேரொளி வழிபாடு, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடந்தது.
தொடர்ந்து காலை, 6:30 மணிக்கு, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது.
தொடர்ந்து கம்பீர சித்தி விநாயகருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

