தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கண்ணதாசன் நுாற்றாண்டு விழா  மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கண்ணதாசன் நுாற்றாண்டு விழா  மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கண்ணதாசன் நுாற்றாண்டு விழா  மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : ஜூலை 24, 2026 01:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், கனகவேல் நினைவு அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் நுாற்றாண்டு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார்.

கண்ணதாசன் நுாற்றாண்டு விழாவையொட்டி கண்ணதாசன் படைப்புகளிலும், பாடல்களிலும் எது பேரழகு?, மண்ணழகா?, விண்ணழகா?, பெண்ணழகா?, பண்ணழகா? என்ற பொருளில் சுழலும் பயிலரங்கம் நடந்தது.

நடுவராக  பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று  பேசும் போது, கிருஷ்ணராஜ் வாணவராயர், கனகவேல் நட்பு குறித்து விளக்கியதுடன், இவர்களது நட்பு இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என விளக்கினார்.

மண்ணழகே என பாரதி, விண்ணழகே என சிவசக்தி, பெண்ணழகே, வாணி இந்திரா விஜயலட்சுமி, பண்ணழகே என லட்சுமி நாராயணன் ஆகியோர் வாதங்களை முன்வைத்து பேசினர்.

அறக்கட்டளை சார்பாக நடந்த கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ் இலக்கிய துறைத்தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். தமிழ்துறை தலைவர் தனலட்சுமி நன்றி கூறினார்.

கல்லுாரி முதல்வர்  மஞ்சுள வள்ளி, இயக்குனர் சரவணபாபு, முதன்மையர் முத்துக்குமரன், நிர்வாக மேலாளர் ரகுநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us